கடந்த மே மாதம் லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவங்கள் பதற்ற நிலையில் இருந்தபோது, நேபாளம் தனது பங்குக்கு இந்தியாவின் சில பகுதிகளை உரிமை கோரியது. 17,060 அடி உயரத்தில் உள்ள லிபு லேக் கணவாய் இந்தியாவின் உத்தரகண்டையும் திபெத்தையும் இணைக்கும் பகுதி. லிப் லேக்கின் தெற்குப் பகுதியில் உள்ள காலாபானி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காலாபானி, லிபு லேக், லிம்பியாதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடத் தொடங்கியிருப்பதன் பின்னணியில் சீனா செயல்படுகிறது என்று இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் நரவணே தெரிவித்தது நேபாளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.