கால்பந்தாட்டத்தில் மாரடோனா வெறும் விளையாட்டு வீரர் மட்டுமல்ல. பந்தின் மூலம் நாடுகளுக்கிடையேயான எல்லைகளைத் தகர்த்தெறிந்து, கால்பந்தாட்டத்தை சர்வதேச விளையாட்டாக மாற்றியதில் அவருக்கு பெரும் பங்குண்டு. ஆர்ஜெண்டீனாவுக்கு கால்பந்தாட்டத்தில் முகவரி ஏற்படுத்திக் கொடுத்தவர் என்பது மட்டுமல்லாமல், சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் மாரடோனாவின் ரசிகர்கள், மாரடோனா ரசிகர்கள் அல்லாதவர்கள் என்று இரண்டு பிரிவினைரை உருவாக்கிய ஆளுமை அவர். வெறும் 60 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தாலும்கூட வருங்கால சந்ததியினர் "யார் அந்த மாரடோனா?' என்று கேள்வி கேட்க இடமில்லாமல், தனக்கென நிரந்தரமான புகழை அவரால் நிலைநாட்ட முடிந்தது. கால்பந்தாட்டம் உள்ள காலம் வரை
மாரடோனா என்கிற பெயர் அழிக்க முடியாததாக ஒன்றிவிட்டது.