

புதுதில்லி கார் வெடிப்பின் பின்னணிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இரு நடக்க இருந்த பெரிய சதித் திட்டம் தடுக்கப்பட்டிருப்பதற்கு ஜம்மு-காஷ்மீர் காவல் துறையையும், தேசிய புலனாய்வு முகமையையும் (என்.ஐ.ஏ.) பாராட்ட வேண்டும்.
பயங்கரவாதிகளின் சதித் திட்டங்களையும், தாக்குதல்களை யும் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை. உல கில் அரங்கேறிய பல்வேறு தாக்குதல்கள் உணர்த்தி இருக்கின் றன. அமெரிக்க உளவுத் துறையால் உலக வர்த்தக மையத்தின் மீது அல்-காய்தா அமைப்பு நடத்திய 9/11 தாக்குதலை முன்கூட் டியே தெரிந்து கொள்ளவோ தடுக்கவோ முடியவில்லை எனும் போது இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ.), ஜம்மு-காஷ்மீர் காவல் துறையும் விழித்துக் கொண்டதை நாம் பாராட்ட வேண்டும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் ஊடுருவித் துல்லியத் தாக்குதல்கள் மூலம் அங்கிருந்த பல ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததற்குப் பழிவாங்கும் நோக்கில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடத்தப்பட இருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் அயோத்தியா, காசி ஆலயங்களையும், அதிகமாகப் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களையும் தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
அண்மையில் நடந்திருக்கும் தில்லி செங்கோட்டை கார் வெடிப்பில், தொடர்புடைய பலரும் நன்றாகப் படித்த மருத்துவர் கள் என்பது கவலையளிக்கும் போக்கு. காஷ்மீரைச் சேர்ந்த ஏழு பேரும் ஜெய்ஷ்-ஏ-முகமது, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடைய காஷ்மீர் மாநிலம் சோபியானைச் சேர்ந்த மத போதகர் முகமது இர்ஃபான் அகமது வாகேயால் வழிகாட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தபோது மெளலவி வாகேயுடன் மருத்துவர்களுக்கு ஏற்பட்ட தொடர்பு, சமூக ஊடகம் மூலம் தொடர்ந்தது மட்டுமல்லாமல், ஏனைய சில மருத்துவர்களையும் தங்களது திட்டத்தில் இணைத் துக் கொள்ள உதவியது என்று விசாரணையில் தெரியவந்திருக்கி றது. தில்லி கார் வெடிப்புடன் தொடர்பில் இருந்த மருத்துவர் உமர் நபி அவருடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்திருக்கிறது.
அண்மையில் நடந்திருக்கும் தில்லி செங்கோட்டை கார் வெடிப்பில், தொடர்புடைய பலரும் நன்றாகப் படித்த மருத்துவர் கள் என்பது கவலையளிக்கும் போக்கு. காஷ்மீரைச் சேர்ந்த ஏழு பேரும் ஜெய்ஷ்-ஏ-முகமது, அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடைய காஷ்மீர் மாநிலம் சோபியானைச் சேர்ந்த மத போதகர் முகமது இர்ஃபான் அகமது வாகேயால் வழிகாட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தபோது மெளலவி வாகேயுடன் மருத்துவர்களுக்கு ஏற்பட்ட தொடர்பு, சமூக ஊடகம் மூலம் தொடர்ந்தது மட்டுமல்லாமல், ஏனைய சில மருத்துவர்களையும் தங்களது திட்டத்தில் இணைத் துக் கொள்ள உதவியது என்று விசாரணையில் தெரியவந்திருக்கி றது. தில்லி கார் வெடிப்புடன் தொடர்பில் இருந்த மருத்துவர் உமர் நபி அவருடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்திருக்கிறது.
பொதுவாக அதிகம் கல்வி அறிவில்லாதவர்கள்தான் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்கிற கருத்து தவறானது. உலகளாவிய அளவில் படித்த இளைஞர்கள் பலர் மார்க்கப் போதனை, அடிப்படைவாதச் சிந்தனைகளால் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பதுதான் நிஜம். அது மட்டுமல்லாமல், பல பயங்கரவாத அமைப்புகளின் தலைமையில் படித்தவர்கள் இருப்பதும் புதிதல்ல.
கொல்லப்பட்ட அல்-காய்தா தலைவர் அய்மன்-அல்-ஜவா ஹிரி அறுவை சிகிச்சை மருத்துவர்; ஒசாமா பின்லேடன் பொறியியல் பட்டதாரி. இப்போது, பலூசிஸ்தான் பிரிவினை ராணுவத்தை வழிநடத்தும் அல்லா நாசர் பலூச் ஒரு மருத்துவர்.
ஐ.எஸ், அல்காய்தா அமைப்புகள்தான் முதலில் படித்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்துக்குள் ஈர்த்தனர். வெடிமருந்துகளைத் தயாரிக்கவும், இயக்கத்துக்குத் தொழில் நுட்பப்பின்புலம் ஏற்படவும் பொறியியல் பட்டதாரிகள் இணைக்கப்பட்டனர். அதைப் பின்பற்றி ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட அமைப்புகளும் படித்தவர்களைக் குறிவைத்து தங்கள் இயக்கத்தில் 'ஸ்லீப்பர் செல்'களாக இணைத்துக் கொள்கின்றன என்பதை தில்லி குண்டு வெடிப்புச் சம்பவம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இத்தனை மருத்துவர்கள் தில்லி குண்டு வெடிப்பின் பின்னணயில் இருப்பது, இந்திய நகர்ப்புறங்களில் அடிப்படைவாதத்துடன் கூடிய மதத் தீவிரவாதம் பெரிய அளவில் பரவத்தொடங்கி இருப்பதன் அறிகுறி. பெங்களூரூ, ஹைதராபாத், லக்னௌ, தில்லியில் படித்த இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் 'ஸ்லீப்பர் செல்' களாக ஊடுருவத் தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
நகர்ப்புற பயங்கரவாதத்துக்கு முன்புபோல, போதனைகளும், தயார்படுத்தலும் தேவைப்படுவதில்லை. படித்த இளைஞர்களை இணையவழியில் தொடர்புகொள்வதும், அவர்களை ஒருங்கிணைத்து சதித்திட்டங்களை மேற்கொள்வதும் போன்ற மதம் சார்ந்த ஒருங்கிணைப்பு, அரசியல் பின்னணி, இணையவழி பரப்புரைகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்வது அவ்வளவு எளிதானதல்ல.
தில்லி கார் வெடிப்பில் வெளிப்பட்டிருக்கும் மற்றுமொரு திருப்பம், அம்மோனியம் நைட்ரேட் பயன்பாடு, 2000 முதல் 2012 வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் இப்போது மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
2008 மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து இதற்குத்தடை கொண்டுவர அன்றைய மன்மோகன் சிங் கூட்டணி அரசு முற்பட்டு, என்ன காரணத்தாலோ அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. 2012-இல் எல்லா நக்ஸல் தாக்குதல்களிலும் அம்மோனியம் நைட்ரேட் பயன்பாடு இருப்பதால் அதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது பல டன்கள் அம்மோனியம் நைட்ரேட் சதிகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றால், அரசு நிர்வாகத்தில் இருக்கும் 'ஸ்லீப்பர் செல்'கள் யார் யார் என்கிற அச்சுறுத்தும் கேள்வி எழுகிறது.
படித்த இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதும், அவர்கள் மத அடிப்படைவாதத்தால் ஈர்க்கப்படுவதும், எல்லா மட்டத்திலும் ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் 'ஸ்லீப்பர் செல்'கள் உருவாக்கப்படுவதும் அபாயகரமான ஊடுருவல்கள்; அதை வேரறுக்க வேண்டும். இனிமேல்தான் கவனம் தேவை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.