மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி இயக்ககத்தில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இளநிலை: பி.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, இஸ்லாமிக், பொருளாதாரவியல்), பி.எஸ்சி., (கணிதம், உளவியல்), பி.பி.ஏ., பி.லிட்., பி.சி.ஏ., போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முதுநிலை: எம்.ஏ.,(தமிழ், ஆங்கிலம், இந்தி, வரலாறு, பொது நிர்வாகவியல், பொருளாதாரவியல், குற்றவியல், சமூகவியல், அரசியல் அறிவியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல், வணிகவியல்), எம்.எஸ்சி.,(கணிதம், இயற்பியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், உளவில்), எம்.சி.ஏ., எம்.பி.ஏ.,(சந்தை, உற்பத்தி, நிதி) போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்காக, நுழைவு படிப்பு (Gate Course), இணைப்புப் படிப்பு (Bridge Course), பட்ட இணைப்புப் படிப்பு போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் தேதி போன்ற விவரங்களை www.msuniv.ac.in இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









