தமிழ் எழுத்து கட்டுப்பாடின்றி கண்டபடி எழுதும் போக்கு உள்ளது:க.ராமசாமி
தமிழ் எழுத்து கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றி கண்டபடி எழுதும் போக்கு உள்ளது. சொல் அமைப்பு மற்றும் தொடர் அமைப்பு சரியாக இல்லை. நிறுத்த குறியீடு இல்லை. எனவே தமிழில் எளிய


தமிழ் எழுத்து கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றி கண்டபடி எழுதும் போக்கு உள்ளது. சொல் அமைப்பு மற்றும் தொடர் அமைப்பு சரியாக இல்லை. நிறுத்த குறியீடு இல்லை. எனவே தமிழில் எளிய சொல்லை தேர்வு செய்து, நிறுத்த குறிகளுடன் எழுத வேண்டும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் க.ராமசாமி தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியில்துறை மற்றும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார்.
விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முன்னாள் இயக்குநர் க.ராமசாமி கருத்துரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இந்திய மொழிகள் அனைத்திற்கும் பாடநூல்கள் மற்றும் கருவி நூல்கள் (அகராதிகள்) உள்ளன. இந்திய மொழிகளான 22 பட்டியல் மொழிகள் தவிர உலகத்தில் உள்ள மற்ற மொழிகள் குறித்த பதிவுகளும் உள்ளன. அந்தமானில் சுனாமிக்கு பிறகு அந்நாட்டு மொழி பேசுபவர்கள் அழிந்ததால், மொழியும் அழிந்தது. ஆனால் மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் அந்தமான் நாட்டு மொழி பதிவு செய்யப்பட்டு, இலக்கணம் உருவாக்கப்பட்டு பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது மொழிகளின் நடுவன் நிறுவனம் சிறுவர்களுக்கான சிறுகதைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து தாய் மொழிகளும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுகிறது. சிறுகதை நூல்களில் உதாரணமாக படங்களுடன் ஒரு பக்கம் ஆங்கிலமும், எதிர் பக்கத்தில் தமிழிலும் சிறுகதைகள் இருக்கும். மற்ற மொழிகளில் ஆங்கிலம் ஒரு பக்கமும், எதிர் பக்கத்தில் அந்த,அந்த மொழிகள் இருக்கும். கதை எழுதுபவர்கள் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கும் போது மொழியியல் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என க.ராமசாமி தெரிவித்தார்.
விழாவில் தமிழியல் துறை முன்னாள் தலைவர் ஆனந்தநடராஜ தீட்சிதர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முன்னாள் துணை இயக்குநர் நடராஜன்பிள்ளை ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.ராஜா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...