யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கலசலிங்கம் பல்கலை.யில் வளாக நேர்காணல்: 53 மாணவர்கள் தேர்வு

சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர்.

News image
Updated On :8 பிப்ரவரி 2013, 12:51 pm

கோ.ஜெயக்குமார்

சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக வந்து வளாக நேர்காணலை நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து அழைத்துச் செல்கிறது. தற்போது சுதர்லேண்ட் குளோபல் சர்வீஸஸ் நிறுவனம் 2012-13-ல் பி.டெக். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தியது. அவர்களின் தனித்திறன், குழு நேர்காணல், தனி நேர்காணல், தொலைபேசி நேர்காணல் உள்ளிட்டவற்றை நடத்தியது. இறுதியாக வளாக நேர்காணலில் பல்கலைக்கழகத்தின் பி.டெக்., சிவில், மெக்கானிக்கல், இ.இ.இ., இ.ஐ.இ., இ.சி.இ., கணினி அறிவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த 53 மாணவ மாணவியர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வு பெற்ற மாணவர்களை பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் பி.கன்னியப்பன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.