கலசலிங்கம் பல்கலை: எம்.எஸ்ஸி.ஆக்டயூரியல் சயின்ஸ் புதிய பாடப்பிரிவு தொடக்கம்
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் எம்.எஸ்ஸி. ஆக்டயூரியல் சயின்ஸ் என்ற புதிய பாடப் பிரிவு தொடக்கம்.


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2012-13-ம் கல்வியாண்டு முதல் எம்.எஸ்ஸி. ஆக்டயூரியல் சயின்ஸ் என்ற புதிய பாடப் பிரிவு தொடங்கப்படவுள்ளதாக துணை வேந்தர் பி.கன்னியப்பன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.]
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 21 பட்டப் படிப்புகளும், 31 பட்ட மேற்படிப்புகளும் நடைபெற்று வருகிறது. இந்த கல்வியாண்டு முதல் ஸ்கூல் ஆப் மேதமெடிக்ஸ், ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் இணைந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி. ஆக்டயூரியல் சயின்ஸ் என்ற புதிய பாடப் பிரிவு தொடங்கப்படவுள்ளது.
இந்த புதிய படிப்பில் பி.எஸ்ஸி. கணிதம், வேதியியல், இயற்பியல் படித்த மாணவர்கள் சேரலாம். ஆக்டயூரியல் சயின்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பான எதிர்காலம், உடனடியான வேலை வாய்ப்பு உள்ளது.
இந்தப் படிப்புக்காக கலசலிங்கம் பல்கலைக்கழகம் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது. இந்தப் படிப்பின் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் கேபிடல் இன்வெஸ்ட்மெண்ட பங்கு, இருப்புத்தொகை, பங்குச் சந்தை நிலவரம் போன்றவற்றை கணித முறைப்படி கணக்கிட்டு பின் வருவதை முன்கூட்டியே கணிக்க இயலும்.
இந்தப் படிப்பிற்கான பாடத்திட்ட முறைகள், பேராசிரியர்கள் ஒதுக்கீடு குறித்த ஏற்பாடுகளை டீன் ஆறுமுகம் தலைமையில் ஒரு பேராசிரியர்கள் குழு செய்து வருகிறது என்றார் துணை வேந்தர். அப்போது உடன் பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் உடனிருந்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...