கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சுய தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் கே.ஐ.டி. மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய தென்னிந்திய சுய தொழில் வளர்ச்சிக்கழக பொது மேலாளர் எ.விஜயகுமார், சுய தொழில் தொடங்க, சுய நலம் வேண்டும் என்று கூறினார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர மாநிலங்களுக்கான தென்னிந்திய சுயதொழில் வளர்ச்சிக் கழக பொது மேலாளர் எ.விஜயக்குமார் சிறப்புரையாற்றி, அவர் கூறியதாவது: சுய தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், மாணவர்களுக்கு இப்போது சுய நலம் வேண்டும். தான் முன்னேறவேண்டும். தான் பிறருக்கு வேலை தர வேண்டும். தான் வேலை தேடிப்போகக் கூடாது என்ற எண்ணம் வேண்டும்.
இந்தியாவுடன் சுதந்திரம் பெற்ற 40 நாடுகள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி, பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் இந்தியா முன்னேறாததற்குக் காரணம் தொழில் வளர்ச்சியில் முழுச் சுதந்திரம் இல்லை. படிக்கும் மாணவர்கள், வேலை தேடி வேறு நாடுகளுக்குச் சென்று அங்கு தொழில் வளர்ச்சியடைய உதவுகிறார்கள். எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் உள்ளார்கள். இந்த மாற்றத்திற்குத்தான் சுய நலம் பேண வேண்டும்.
மாணவர்களுக்கு ஒழுக்கம் முக்கியம். வகுப்பறையில் அதனைப் போதிக்க வேண்டும். ஹாலந்து நாட்டில் பி.இ. மெரைன் என்ஜினியரிங் உள்ளது. அதில் முதல் பருவத்தில் 6 மாதத்திற்கு ஒழுக்கக் கல்வி (Character Education) என்ற பாடம் உள்ளது. எல்லா பொறியியல் துறையிலும் மென்பொருள், கடினப்பொருள் என இரண்டு உள்ளது. இரண்டிலும் நிங்கள் வல்லவராகத் திகழ வேண்டும். புதிய கண்டுபிடிப்புக்கு ஆர்வம் மற்றும் ஊக்கம் தரவேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபட பள்ளிகளில் வசதி செய்து தர வேண்டும் என்றார் அவர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கே.ஐ.டி. முதல்வர் டாக்டர் எஸ்.ஆர்.ஸ்ரீகுமார் செய்திருந்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

