ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிராமப் பள்ளி குழந்தைகள் அமைத்த அறிவியல் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமப்புற தொடக்கப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியரும் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2014, 7:40 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமப்புற தொடக்கப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியரும் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாப்பையநாயக்கன்பட்டியில் இந்து ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 40 மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். முதல் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவ மாணவியரும் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி இப் பள்ளியில் நடைபெற்றது.

கண்காட்சி தொடக்க விழா அயன்நாச்சியார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவி சந்திரபிரபா தலைமையில், பள்ளிச் செயலர் வெ.ருக்மணி முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜா வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் சேவியர்ராஜ் ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.

கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் சேவியர்ராஜ் பேசுகையில் கூறியதாவது:

கிராமப் புற ஏழை மாணவ மாணவியரின் அறிவியல் ஆர்வம் பாராட்டுக்குரியது. பலூன் ராக்கெட், ஐஸ்கட்டி உருகுநிலை மற்றும் உறைநிலைச் சோதனை, பகடைச் சோதனை, மூலிகைத் தாவரங்கள், ஊட்டச் சத்துணவுகள் என மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியும், அவர்கள் செய்து காட்டிய சோதனைகளும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருந்ததுடன், மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது.

அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவு அடிப்படையில் அறிவது. இயற்கையை நோக்கி அடிப்படையான பகுத்தறிவு நோக்கிலான அறிவு பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, பரிசோதித்து, முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது கோட்பாடு உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும், எதிர்கூறலுக்கு உதவுவதாகவும் அமையவேண்டும்.

அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் ஆகியவற்றையே சிறப்பாக குறிக்கிறது. இவை இயற்கை அறிவியல் என்று இப்போது அறியப்படுகின்றன. இயற்கை அறிவியலில் கணிதம் பன்முக வலுவோடு பயன்படுகிறது. இவை பற்றி துல்லியமாக புறவயமாக ஆய முடிவதால் இவற்றை வலு அறிவியல் துறைகள் (hard sciences) என்பர்.

அறிவியல் வழிமுறை என்பது இயற்கையின் இயல்பையும் இயக்கத்தையும் ஆய, புதிய அறிவை பெற, அறிவைத் திருத்த ஒருங்கிணைக்க பயன்படும் நுணுக்கங்கள் (techniques) ஆகும். அறிவியல் வழிமுறை என்று கருதப்பட,  அவதானிக்கப்படக்கூடிய, அனுபவத்தால் பரிசோதனையால் அறியப்படக்கூடிய, அளவிடக்கூடிய ஆதாரங்களையும், அவ்வாதாரங்கள் பகுத்தறிவாய்வுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என்றார் அவர். ஆசிரியப் பயிற்றுநர் பெத்தணசாமி வாழ்த்துரை வழங்கினார்.கண்காட்சியை அருகில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.