ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கலசலிங்கம் பல்கலை. சார்பில் மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை பகுதியில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழி காட்டுவதற்காக, மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் (படம்) தெரிவித்துள்ளார்.

News image
Updated On :27 மே 2014, 8:14 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை பகுதியில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர் கல்விக்கு வழி காட்டுவதற்காக, மதுரையில் இலவச கல்வி வழிகாட்டி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வேந்தர் க.ஸ்ரீதரன் (படம்) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் இந்த இலவச கல்வி வழிகாட்டி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

இதில் பேராசிரியர்கள் டாக்டர் அலாவுதீன், டாக்டர் ராமலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இன்றுள்ள தொழில்நுட்பத் துறையில் எந்த  துறை எடுத்துப் படிக்கலாம் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள். பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை டீன் டாக்டர் வெ.வாசுதேவன் செய்துள்ளதாக வேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு துணைப் பதிவாளர் பேராசிரியர் பி.ஜி.குருசாமிபாண்டியனை  94437-28907 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.