விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2015, 8:38 am

கோ.ஜெயக்குமார்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள 6 முதல் 18 வயது வரையுள்ள பள்ளி மாணவ மாணவியருக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் திரு.வி.க. தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் க.நல்லதம்பி முன்னிலையில், மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.சர்வேஸ்வரன் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மாடசாமி வரவேற்றார்.

முகாமில் 200 மாணவ மாணவியருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை 4 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். இதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது உடல் ஊனத்தன்மையைப் பொறுத்து அவர்களுக்கு இலவசமாக உபகரணங்களை தமிழக அரசு வழங்கும் என்று கல்வித் துறை அலுவலர்கள் அப்போது கூறினர்.

இதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் மாடசாமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.