மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காணாமல் போன விமானத்தை கண்டறிய உதவும் வயர்லஸ் கருவி: மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிக்கேஷன் இன்ஜினீரிங் பாடப்பிரிவு மாணவிகள் இருவர் அதிநவீன

News image
Updated On :16 ஜூலை 2015, 10:34 am

சீனிவாசன்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிக்கேஷன் இன்ஜினீரிங் பாடப்பிரிவு மாணவிகள் இருவர் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் காணாமல் போன விமானத்தை கண்டறிய உதவும் வயர்லஸ் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கல்லூரியில் பயிலும் எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யுனிக்கேஷன் இன்ஜினீரிங் பாடப்பிரிவின் இறுதி ஆண்டு மாணவி வி.சிவப்ரியா மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவி சி.பாண்டிமீனாட்சி வடிவமைத்துள்ள இந்த கருவீ ஜிக்பீ மற்றும் ஜிபிஎஸ் எனும் அதிநவீன தொழில்நுடபத்தின் உதவியுடன் விமானத்தின் கரும்புப்பெட்டியில் பொருத்துவதற்கு ஏற்ப இக்கருவி வடிவமைக்க பட்டுள்ளது.

இன்றியை காலகட்டத்தில் ஏராளமான விமானங்கள் மாயமாகிவிடுகின்றன.அவற்றைத் தேடும் பணியில் உலக நாடுகள் பங்கேற்றாலும் ஒரு மாதத்திற்குள்ளாக விமானத்தின் கருப்புபெட்டியில் இருந்த தகவலை சேகரிக்காவிட்டால் விமானத்தை கண்டுபிடிப்பது என்பது சுலபமானதாக அமையாது.உதாரணாக சமீபத்தில் மாயமான மலேசியன் விமானம் எம்.எச்.370 மற்றும் சி.ஜி.791 ஆகிய விமானங்களை கண்டுபிடிப்பதில் ஏற்ப்பட்ட சிக்கல்களை இந்த மாணவ குழு உருவாக்கியுள்ள இந்த கருவி சரிசெய்யும்.

இக்கருவி 50 மீட்டர் வரை 2.5ஜிஎச்ஆர் ப்ரிகொன்சி யில் இயங்கும் .மேலும் விமானத்தில் இரண்டு கருப்பு பெட்டி பொருத்தப்பட வேண்டும்.விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட உடன் ஒரு கருப்புப்பெட்டி தானாக விமானத்தில் இருந்து விடுவிக்கட்டு போராஷூட் உதவியோடு கீழே இறக்கப்படும்.அதில் லேசர் ஒளி எழுப்பப்பட்டு தண்ணீரிலும் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.பின்பு ஜிக்பீ மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட செனசர்  பால் 1கிலோமீட்டர் ஒரு பால் என்றபடி விமானத்தில் இருந்து வெளியேற்றப்படும்.ஏர் ட்ராபிக் கண்ட்ரோல் ரூமில் இருந்து கடைசியாக தகவல் துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து கருப்புபெட்டியை கண்டுபிடித்துவிடலாம்.அதன் உதவியோடு சென்சர் பால் எந்த திசையில் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை துள்ளியமாக திரையில் காணமுடியும்.இவ்வாறு சென்சர் பால் ஐ ட்ராக் செய்தவன் மூலம் விமானம் இருக்கும் இடத்தை கண்டறியலாம் என்கிறார் இக்கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டியாக இருந்த ஆய்வு பொறியாளர் ராஜபார்த்திபன்.

இந்த சிறிய வடிவிலான கருவி குறைவான மின்னாற்றலை பயன்படுத்துவதுடன் ஒரு வருடம் வரை மின்சக்தியை சோலார் உதவியுடன் பேட்டரியில் சேமித்து வைத்து கொள்ளமுடியும்.இக்கருவியை வடிவமைக்க 2500 ரூபாய் செலவானதாகவும்,இதை மேலும் விரிவுபடுத்தினால் 1கிலோமீட்டர் வரை சிக்னலை அனுப்பவும் பெறவும் முடியும் என்கிறார் சிவப்ரியா.

இந்த கண்டுபிடிப்பை ஊக்கபடுத்தும் வகையில் மாணவிகளுக்கு கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன்,துணைத்தலைவர் சுகுமாறன் மற்றும் செயலர் நாராயணசாமி ஆகியோர் பாராட்டினர்.கல்லூரியிந் முதல்வர் முனைவர் செந்தில் மாணவிகளை பாராட்டி கல்லூரியின் சார்பில் ஊக்கதொகை வழஹ்கி கூறியது,எங்கள் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தில் நடைபெற்ற மலேசியன் விமானம் எம்.எச்.370 காணாமல் போனதை அடுத்து நடைபெற்ற நேஷனல் லெவல் கான்பிரன்ஸில் இந்த குழு பரிசை வென்றது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.