சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக்குழுத் தலைவர் ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பள்ளிக்குழுச் செயலர் வி.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் எஸ்.நடனசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துவின் அரிய முயற்சியால் சேகரிக்கப்பட்ட தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சங்காலம் முதல் மூவேந்தர்கள், நாயக்கர்கள் கால வரையிலான நாணயங்களும், தற்கால நாணயங்கள் மற்றும் அயல்நாட்டு நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தின் முக்கிய நகரங்களின் முந்தைய நிலைகள், தேசத் தலைவர்களின் அரிய புகைப்படங்கள், தமிழர்களின் வீரவிளையாட்டுகள் குறித்த புகைப்படங்களும், இந்தியாவின் பழமையான பத்திரிகை புகைப்படங்கள், சங்க கால அரிய படிமங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பெற்றோர்கள், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு

வில்லியனூரில் முதல்வா் ரங்கசாமி பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

