சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிதம்பரம் பள்ளியில் தொன்மையான நாணயங்கள் கண்காட்சி

சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 மார்ச் 2015, 12:34 pm

சிதம்பரம் ஷெம்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்குழுத் தலைவர் ஏ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். பள்ளிக்குழுச் செயலர் வி.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் எஸ்.நடனசபாபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முத்துவின் அரிய முயற்சியால் சேகரிக்கப்பட்ட தொன்மையான நாணயங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. சங்காலம் முதல் மூவேந்தர்கள், நாயக்கர்கள் கால வரையிலான  நாணயங்களும், தற்கால நாணயங்கள் மற்றும் அயல்நாட்டு நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தமிழகத்தின் முக்கிய நகரங்களின் முந்தைய நிலைகள், தேசத் தலைவர்களின் அரிய புகைப்படங்கள், தமிழர்களின் வீரவிளையாட்டுகள் குறித்த புகைப்படங்களும், இந்தியாவின் பழமையான பத்திரிகை புகைப்படங்கள், சங்க கால அரிய படிமங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பெற்றோர்கள், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.