தனியார் பல்கலைக்கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டது.
அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாக, பிரதமரின் தலைமையிலான தேசியக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.
அதன்படி, கல்வி நிறுவனங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர் சேர்க்கை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து பொதுமக்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சட்டப்பேரவையால் அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினமான நவம்பர் 26-ஆம் தேதியில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்ட அறிமுகவுரை வாசிக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டது தொடர்பாக ஹம்க்ஷங்க்ந்ஹழ்.ன்ஞ்ஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் யுஜிசி-க்கு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

