சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

விடைகள் முழுவதையும் கோடிட்டு அடித்தால் அடுத்து இரு பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.

மாணவ - மாணவிகள் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயல் இனி ஒழுங்கீனச் செயலாக கருதப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ - மாணவிகள் அடுத்து வரும் இரு பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது. கொடுக்கப்படும் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு விடை

எழுதினால் முழு மதிப்பெண்கள் (நூற்றுக்கு நூறு) பெற முடியாது என்ற எண்ணம் உருவாகும் நேரத்தில், உடனடித் தேர்வில் எளிதான வினாக்கள் இருக்கும் என்பதால் அதை எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணி, மாணவர்கள் இவ்வாறு கோடிட்டு அழிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தேர்வுத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேபோல், வினாத்தாளில் குறியீடு எழுதுவது, விடைத்தாளில் பெயர், குறியீடுகள் எழுதுவது, கலர் பென்சில், கலர் பேனா போன்றவற்றைப் பயன்படுத்துவது, விடைத்தாளின் இடது, வலது ஓரங்களில் எழுதுவது, கிழிப்பது போன்றவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

மேலும், விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் உள்ள புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கையொப்பமிடுவது, வினா எண்ணைக் குறிப்பிடுவது, எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடிடுவது போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும் என்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.