கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மாநாடு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புவி


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புவி வெப்பமயமாதல், மின்சக்தி வளர்ச்சி மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் இரு நாள் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு வேந்தர் முனைவர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் ச.சரவணசங்கர் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் முனைவர் வினோலின் ஜேப்ஸ் வரவேற்றார்.
இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், பதிவாளர் வெ.வாசுதவேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆராய்ச்சியாளர் எஸ்.ஜெயக்குமார் இருநாள் சர்வதேச மாநாட்டு கட்டுரைகள், உரையாடல்கள், நிகழ்வுகள் குறித்து விளக்கினார்.
சென்னை ஐஐடி மத்திய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநர் வி.ராமானுஜாச்சாரி மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய உலகின் முக்கிய சவால்கள் புவி வெப்பமயமாதல், அதிவேகமாக பயன்பட்டு வரும் செல்போனை தொடர்ந்து பயன்படுத்துவதால் உண்டாகும் வெப்பத்தால் பழுதடையும் உபகரணங்களைப் பாதுகாத்தல், மின்சார சேமிப்பு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கரியமில வாயுவை தடுப்பது உள்ளிட்வையாகும்.
இதற்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆராய்ச்சி மாநாடு மிகவும் அடிப்படை கிரியா ஊக்கியாக இருக்கும். செல்போனில் ஏற்படும் வெப்பத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் உள்ளது. இதில் தற்போது ஹீட் ஸ்பெர்டர் என்ற புதிய உபகரணம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சாலையில் ஓடும் ஊர்திகளின் கரியமில வாயுவை குறைக்கக ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதுதான் சரியான தீர்வு என்றார் அவர்.
மலேசியா யு.பி.எம். பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் முகமது சுல்தான் பேசுகையில் கூறியதாவது: கலசலிங்கம் பல்கலைக்கழகமும், மலேசியா யு.பி.எம். பல்கலைக்கழகமும் விரையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது. இதன்படி, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதியதாக 2016-17-ம் கல்வியாண்டு தொடங்கப்படும் பி.டெக். விவசாயம் துறைக்கு தேவையான புதிய சிறப்பு பாடத்திட்டங்களை மலேசிய பல்கலைக்கழகம் வகுத்துத் தரும். மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலேசியா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். கலசலிங்கம் மாணவர்கள் மலேசியா பல்கலைக்கழகம் வந்து படிப்பதற்கும், ஆய்வுக்கூடங்களைப் பயன்படுத்துவதற்கும் வசதி செய்து தரப்படும். கலசலிங்கம் பேராசிரியர்களுக்கு இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சார்ட்டர்டு பொறியாளர், சார்ட்டர்டு ஆராய்ச்சியாளர் படிப்புகளுக்கு அங்கீகாரத்தை பெறுவதற்கு பயிற்சி தரப்படும்.
சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டு மலரை சென்னை ஐஐடி விண்வெளித்துறை பேராசிரியர் சத்திய ஆர்.சக்கரவர்த்தி வெளியிட, மலேசிய பல்கலைக்கழக ஆராய்சசி மைய இயக்குநர் முகமது டாரிக் பின்ஹமீது சுல்தான் பெற்றுக் கொண்டார்.
ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கொரியா, கனடா, போலந்து, நியூசிலாந்து, தைவான், துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள் மாநாட்டில் இடம் பெற்றன. பின்னர் ஆராய்ச்சியாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. மாநாட்டில் சர்வதேச அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் முத்துவேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...