டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு: தமிழக அரசு எதிர்ப்பு

பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

DIN

புதுதில்லி: பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாநில அரசுடன் கலந்து பேசாமல் கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு வரும் 2018-19-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தில்லியில் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, கூட்டத்தில் உரையாற்றிய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தார். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என்றும், +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.

நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப குழுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் நுழைவுத் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று அன்பழகன் தெரிவித்தார்.

மேலும், நுழைவுத் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இதுபோன்ற முக்கிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக, மத்திய அரசு மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும், எனவே 2018-ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பழகன் வலியுறுத்தி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.