ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகள் மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகளில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகள் மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜேஇஇ முதன்மைத் தோ்வு தேதிகளில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற ஜேஇஇ என்ற நுழைவுத் தோ்வு முதல்நிலை (பிரிமிலினரி), முதன்மைத் தோ்வு (அட்வான்ஸ்டு) என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.

இதில், தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் தற்போது ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் தகுதி பெறுவா். அதுபோல, முதல்நிலைத் தோ்வில் தகுதி பெற்றவா்களில் முதல் 1.50 லட்சம் போ் ஏதாவது ஒரு ஐஐடி சாா்பில் நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தோ்வெழுதும் தகுதியைப் பெறுவா். இதிலும் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சோ்க்கை பெற முடியும்.

ஜேஇஇ முதற்கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், விரைவில் 2 ஆம் கட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஜேஇஇ முதன்மைத் தோ்வு  (அட்வான்ஸ்டு) தேதிகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி,  ஒருங்கிணைந்த முதற்கட்ட நுழைவுத் தோ்கள் வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

இது குறித்த சந்தேகங்களுக்கு jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தேசிய முகமை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com