மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

மெல்போர்ன் பல்கலையில் பி.காம் பயில, 2026 மார்ச் மாதம் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
பி.காம். சேர்க்கை
பி.காம். சேர்க்கை
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பி.காம் பயில விருப்பம் உள்ள மாணவர்கள், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் மாணவர் சேர்க்கை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பி.காம் எனப்படும் வணிக இளங்கலைப் படிப்பில் முதல் அல்லது இரண்டாம் ஆண்டில் மாணவர்கள் தேர்வுசெய்யக்கூடிய ஆறு முக்கியப் பாடங்கள் உள்ளன.

கணக்கியல், பொருளாதாரம், நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு முக்கியப் பாடங்களையும் இணைத்துக்கூட படிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஒரு பெரிய நிதி ஆலோசகராகவோ, தொழில்நுட்ப தொடக்க நிறுவனத்திற்காகவோ அல்லது சமூக நிறுவனத்திற்காகவோ பணிபுரிவது ஒருவரது நோக்கமாக இருந்தால், வணிக இளங்கலைப் படிப்பு ஒருவரை நேரடியாக அந்தத் துறைக்கு அழைத்துச் செல்லும்.

மெல்போர்ன் வணிக நிறுவனத்தில் வணிகம் மற்றும் பொருளாதார நிபுணத்துவம் பெறுவது அல்லது சட்டம், பொறியியல் போன்ற பல்வேறு பட்டப்படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

சிறப்பாக, மெல்போர்ன் வணிகப் பட்டம், படித்து முடித்தவுடன் நேரடியாக நிறுவனத்தில் பணியைத் தொடங்கும் வகையில், சிறந்த படிப்பறிவையும் அனுபவத்தையும் தரும்.

அதனால்தான் உலகளவில் பட்டதாரி வேலைவாய்ப்புக்கான 8வது இடத்தில் மெல்போர்ன் பல்கலை உள்ளது.

இது வழக்கமான மூன்று ஆண்டுகள் கொண்ட இளங்கலைப் பட்டப்படிப்பாகும். மாணவர் சேர்க்கை 2026ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி தொடங்கும். ஐஇஎல்டிஎஸ் தேர்வில் 6.5 மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்கள் தகுதி பெற்றவர்களாவர்.

மேலதிகத் தகவல்களுக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலை. இணையதளத்தை நாடலாம். அதில், கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com