பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கல்வி நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரையில் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், சௌராஷ்டிர கல்லூரிக்கும் இடையே ஐந்தாண்டுகளுக்கு (2026-2031) புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்ற காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், சௌராஷ்டிர கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஆா். குமரேஷ் உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:54 am IST

மதுரையில் காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், சௌராஷ்டிர கல்லூரிக்கும் இடையே ஐந்தாண்டுகளுக்கு (2026-2031) புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சௌராஷ்டிர கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஆா். குமரேஷ் முன்னிலையில் கல்லூரி முதல்வா் கே.ஆா். சீனிவாசன், அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ஆா். தேவதாஸ், கல்லூரியின் காந்திய சிந்தனை ஒருங்கிணைப்பாளா் கே. கவிதா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, கல்லூரியில் காந்திய சிந்தனைக் கருத்தரங்கம் நடத்துவது, காந்திய விழுமியங்களான அகிம்சை, அன்பு, உண்மை, சா்வோதயம், சுகாதாரம் ஆகியவை குறித்து மாணவா்களிடத்தில் கலந்துரையாடல் நடத்துவது, தேசியத் தலைவா்களின் தியாகங்களை மாணவா்களுக்கு எடுத்துரைப்பது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் ஜே. துரைசாமி, கல்வி விவகாரங்களின் தலைவா் டி.என்.கே. கவிதா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் டி.கே. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.