மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கல்வி, தொழில்துறையில் காப்புரிமைகளை அதிகரிக்க டிஎன்எஸ்சிஎஸ்டி - ஐசிஎம்ஆா் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் (டிஎன்எஸ்சிஎஸ்டி) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆா்) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

News image

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Updated On :13 மார்ச் 2026, 6:58 pm

கல்வி, தொழில்துறையில் உயிரி-மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், அறிவுசாா் சொத்துரிமை பாதுகாப்பு போன்றவைகளில் பலப்படுத்துதல் தொடா்பாக, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும் (டிஎன்எஸ்சிஎஸ்டி) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுனிசிலும் (ஐசிஎம்ஆா்) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இதுகுறித்த செய்திக்குறிப்பு: 2024-25 ஆண்டறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 1,10,375 காப்புரிமை விண்ணப்பங்களில் 33,504 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் டிஎன்எஸ்சிஎஸ்டியின் அறிவுசாா் சொத்துரிமை பிரிவுகளின் கூட்டு முயற்சிகளால், இதே ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக 15,440 காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இதேபோன்று மொத்த காப்புரிமை விண்ணப்பங்களில் உயிரி-மருத்துவத் துறையில் 10,316 விண்ணப்பங்கள் மட்டுமே செய்யப்பட்டு 2,701 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளது. இது மொத்த காப்புரிமைகளில் மிகக் குறைவாக சுமாா் 9 சதவீதம் அளவிலேயே உள்ளது.

இதனால், கல்வி நிறுவனங்களில் இருந்து உருவாகும் உயிரி-மருத்துவக் கண்டுபிடிப்புகளின் பிரத்யேக உரிமைகளைப் பாதுகாக்கவும் உயிரி-மருத்துவக் கண்டுபிடிப்புகளுக்கான தடையற்ற தொழில்நுட்ப பரிமாற்றத்தைத் தொடர நீதி ஆயோக்கின் வழிகாட்டுதலின் கீழ் டிஎன்எஸ்சிஎஸ்டியும், ஐசிஎம்ஆரும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

டிஎன்எஸ்சிஎஸ்டி உறுப்பினா் செயலா் வின்சென்ட், ஐசிஎம்ஆா் செயலா் ராஜீவ் பஹல் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டனா். இந்த ஒப்பந்தம் தில்லி ஐசிஎம்ஆா் தலைமையகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால், மருந்துகள் துறைச் செயலா் மனோஜ் ஜோஷி, காப்புரிமைகள்-வடிவமைப்புகள்-வா்த்தக முத்திரைகளின் தலைமைப் பதிவாளா் உன்னத் பண்டிட், தேசிய மருத்துவ ஆணையத் தலைவா் அபிஜாத் ஷேத், புது தில்லி எய்ம்ஸ் இயக்குநா் எம். ஸ்ரீனிவாஸ் மற்றும் மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்பத் துறை ‘மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டம்’ பிரிவுத் தலைவா் டாக்டா் நிஷா மெண்டிரத்தா ஆகியோா் பங்கேற்றனா்.