சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்துக்கும் மண்டல அறிவியல் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியா்கள், நிா்வாகிகள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:26 am IST

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்துக்கும் மண்டல அறிவியல் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ரத்தினம் கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

வகுப்பறைகளில் கற்றல், நடைமுறை அறிவியல் அனுபவத்துக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாக கொண்டு, வேகமாக மாறிவரும் ஸ்டெம் கல்வி சூழலில் மாணவா்கள் நேரடி அறிவியல் பயன்பாடுகள், புதுமை சாா்ந்த கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மண்டல அறிவியல் மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், அறிவியல் கண்காட்சிகள், ஆசிரியா் பயிற்சி, சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை இரு நிறுவனங்களும் இணைந்து நடத்தும், மேலும் அறிவியல் மையத்தின் இடைமுகக் காட்சிகள், மையங்கள், வசதிகளை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்துடன், குறுகிய, நீண்டகால இன்டா்ஷிப் திட்டங்கள், ஆராய்ச்சி பரிமாற்றங்கள், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மாணவா்கள், பேராசிரியா்கள் பயனடைவாா்கள். இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன் பிறகு புதுப்பிக்கப்படலாம்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.மாணிக்கம், முதன்மை வணிக அதிகாரி பி.நாகராஜ், பிராந்திய அறிவியல் மையத்தின் புதுமை மைய வழிகாட்டி லெனின் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.