சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News image

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள்.. - ANI

Updated On :13 ஏப்ரல் 2026, 6:35 am

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் ஏப்ரல் 20ஆம் தேதி அல்லது மாத இறுதியிலேயே வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும் இதுபற்றி சிபிஎஸ்இ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

அதுபோல, இந்த முறை, பல டிஜிட்டல் முறைகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது. இதனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தைப் பார்ப்பதால் அது முடங்கும் அபாயம் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுத் தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் கட்டி சீல் வைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்குக் கொண்ட செல்லப்பட்டு, திருத்தும் பணிகள் நடைபெறும். அதன்பிறகு, விடைத்தாள்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதில் உள்ள தரவுகள் சரி பார்க்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.

நாடு முழுவதும் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. அதன்பிறகான அனைத்துப் பணிகளும் முழுமையடைந்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை அடைவதால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு ஏப்ரல் மாதத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றால் அது ஒன்று ஏப்ரல் 20ஆம் தேதி வெளியாகலாம். அல்லது ஏப்ரல் 27ஆம் தேதியாக ஆக இருக்கலாம் என்றும் பொதுவான கணிப்புகள் நிலவுகின்றன.

கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், இந்த ஆண்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்கூட்டியே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகறிது.

வெகு தாமதத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு அவ்வளவு தாமதமாக வெளியாகக் கூடாது என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.