திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு..

News image

விஐடி நுழைவுத் தேர்வு - File photo

Updated On :18 ஏப்ரல் 2026, 10:42 am IST

வேலூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கி வரும் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டில் பிடெக் சேர்க்கை பெற நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் அதற்குத் தயாராக வேண்டும்.

விஐடி நுழைவுத் தேர்வு ஏப். 28 முதல் மே 3 வரை இரண்டு வேளைகளாக நடக்கிறது. இந்த நுழைவுத் தேர்வில் 1 லட்சம் ரேங்குக்குள் வந்தால் மட்டுமே சேர்க்கை பெற முடியும்.

ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்குத் தயாரானவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வுகள் எளிதாகவே இருக்கும்.

அந்தந்த பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் பயிற்சி செய்வது பெரிய அளவில் உதவும்.

விஐடி பல்கலை நுழைவுத் தேர்வில் கணிதப் பாடத்திலிருந்து 30 கேள்விகளும் இயற்பியல் பாடத்தில் 35 கேள்விகளும் வேதியியல் பாடத்தில் 35 கேள்விகளும் ஆங்கிலத்திலிருந்து 5 கேள்விகளும் ஆப்டிடியூட் தேர்வில் 10 கேள்விகளும் என 125 கேள்விகள் கேட்கப்படும். சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இந்த ஆண்டிலிருந்து தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நேரம் 2.30 நிமிடங்கள். கணினி முறையில் பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெறும்.

கணிதத்துக்கு 32 சதவிகித மதிப்பெண் இருக்கிறது எனவே, இதற்கு 40 - 450 நிமிடங்கள் வரை ஒதுக்கி சரியான விடை என்று தெரிந்தால் மட்டும் பதிவு செய்யலாம்.

இயற்பியல் வேதியியலுக்கு தலா 28 சதவிகித மதிப்பெண் என்பதால் அதற்கும் தலா 40 - 50 நிமிடங்கள் வரை செலவிடலாம்.

ஆங்கிலத்துக்கு வெறும் 4 சதவிகித மதிப்பெண் என்பதால் 10 நிமிடங்கள் வரை செலவிடலாம். ஆப்டிடியூட் தேர்வுக்கு 8 சதவிகித மதிப்பெண்கள் இருப்பதால் அதற்கும் மாணவர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

விஐடி சேர்க்கைக்கான தகுதி என்ன?

பிடெக் சேர்க்கை பெற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கணிதம்/உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வுக்கு படிக்கும்போது..

ஒரு பாடத்துக்கு இரண்டு விதமான புத்தகங்களை மட்டும் பார்யக்கவும். இணையதளத்தில் நடக்கும் பயிற்சித் தேர்வுகளை எழுதுங்கள். பயப்பட வேண்டாம். நாள்தோறும் குறைந்தது இரண்டு மோக் தேர்வுகளை எழுதிப் பார்க்கலாம்.

மிகக் கடினமான பாடங்களை அதிக முறை படியுங்கள்.

விடுமுறையில் இருப்பதால் குறைந்தது 5 மணி நேரம் படித்தாலே விஐடி தேர்வுக்கு நல்ல முறையில் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

முதல் 5 ஆயிரம் ரேங்க் எடுப்பவர்களுக்கே விஐடியில் கணினி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிக் என்ஜினியரிங் கிடைத்திருக்கிறது. அதனைக் கவனத்தில் வைத்து பயிற்சி எடுக்க வேண்டும்.

Summary

For students preparing for VIT University entrance exam..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.