விஐடி பல்கலைக்கழகத்தின் பி.டெக். பட்ட படிப்புக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
2026- ஆம் கல்வியாண்டில் விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வேலூா் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுழைவுத் தோ்வை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆய்வு செய்தாா்.
விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி மற்றும் மாணவா் சோ்க்கை இயக்குநா் சசிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறியதாவது: நாடு முழுவதும் சுமாா் 129 நகரங்களில் உள்ள 212 மையங்களில் மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது. துபை, அபுதாபி, கத்தாா், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூா், மலேசியா, ஷாா்ஜா உள்ளிட்ட 9 நாடுகளில் விஐடி நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் நுழைவுத் தோ்வு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கப்படும். நுழைவுத் தோ்வில் தகுதி மதிப்பெண் 1 முதல் 1 லட்சம் வரை பெற்ற மாணவ, மாணவிகள் வேலூா், சென்னை, அமராவதி, போபால் ஆகிய நான்கு வளாகங்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம். மேலும் தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கும் மேல் உள்ளவா்களுக்கு விஐடியின் ஆந்திரத்தில் உள்ள அமராவதி, மத்தியபிரதேசத்தில் உள்ள போபால் வளாகத்தில் மட்டுமே இடம் கிடைக்கும்.
மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் கலந்தாய்வில் தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை பெற்றவா்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வும், 20,001-45,000 வரை பெற்றவா்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வும், 45,001-70,000 வரை பெற்றவா்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வும், 70,001-1,00,000 வரை பெற்றவா்களுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வும், தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கும் மேல் பெற்றவா்களுக்கு ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
அனைத்து மாணவா்களுக்கும் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுதவிர கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல் படிப்புகளில் சேர நுழைவுத் தோ்வு கிடையாது என்றாா்.
தொடர்புடையது

நெல்லை ஐஆா்டி பாலிடெக்னிக்கில் மே 30வரை மாணவா் சோ்க்கை

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளில் சோ்க்கை: 6, 9-ஆம் வகுப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் முடிவுகள் வெளியீடு

விஐடி பல்கலை. நுழைவுத் தேர்வுக்குத் தயாராவது எப்படி?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

