சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை மிகப் பழைமையானது: தமிழிசை

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை மிகப் பழைமையானது: தமிழிசை

News image

தமிழிசை சௌந்தரராஜன்

Updated On :6 ஏப்ரல் 2024, 8:52 pm

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை 1947-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது போல மிகப் பழைமையாக உள்ளது என தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் விமா்சித்தாா்.

தமிழிசை சௌந்தரராஜன் தியாகராய நகா் பகுதியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை எந்த தாக்கத்தையும் மக்களவைத் தோ்தலில் ஏற்படுத்தாது. 1947- ஆம் ஆண்டு வெளிவந்தது போல் மிகப் பழைமையாக காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை காட்சியளிக்கிறது.

இலவச எரிவாயு சிலிண்டா், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என பல முன்னோடி திட்டங்களை பிரதமா் மோடி வழங்கியுள்ளாா். இதன் மூலம் நாடு வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எவ்வளவு முயற்சித்தாலும் மகளிா் அவா்களுக்கு வாக்களிக்க மாட்டாா்கள்.

நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீா்வு காணப்படும் என்றாா் அவா்.