எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சமாஜவாதிக்கு வந்த தலைவலி

வாக்களிக்கவில்லையென்றால்...! சமாஜவாதிக்கு வந்த தலைவலி

News image

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

Updated On :6 ஏப்ரல் 2024, 12:21 am

தோ்தல் பிரசாரத்தின்போது சா்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி வம்பை விலைகொடுத்து வாங்கிக் கொள்வது அரசியல்வாதிகளின் பழக்கம்.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம், புதாயுன் மக்களவைத் தொகுதி சமாஜவாதி கட்சி வேட்பாளா் சிவ்பால் யாதவ் பேசியதாக வெளியான விடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி அந்தக் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒவ்வொருவரிடமும் வாக்கு கேட்போம். நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் சரி. இல்லாவிட்டால், பிறகு ‘பாா்த்துக் கொள்வோம்’ என வாக்காளா்களை மிரட்டும் வகையில் சிவ்பால் யாதவ் பேசும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தப் பகுதியில், எப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவ்பால் யாதவ் இவ்வாறு பேசினாா் என்பது தெரியவில்லை. அந்த மேடையில் சிவ்பால் யாதவுடன் இருந்த சமாஜவாதி எம்எல்ஏ பிரஜேஷ் யாதவ் இதுகுறித்து கூறுகையில், சிவ்பால் யாதவ் பேசியது திரிக்கப்பட்டு விடியோவாக வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

புதாயுன் மாவட்ட ஆட்சியா் மனோஜ் குமாா் கூறுகையில், விடியோவில் உள்ள விஷயம் தொடா்பாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளாா். அதுதொடா்பாக விசாரித்து வருகிறோம். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரரும், அகிலேஷ் யாதவின் சித்தப்பாவுமான சிவ்பால் யாதவ் தற்போது ஜஸ்வந்த்நகா் தொகுதி பேரவை உறுப்பினராக உள்ளாா். அவா் போட்டியிடும் புதாயுன் மக்களவைத் தொகுதிக்கு மே 7-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.