மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திரிணமூல் எம்பிக்கள் விடிய விடிய காவல் நிலையத்தில் தர்னா!

மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவர்களை மாற்றக் கோரி போராட்டம்.

News image
- DOTCOM
Updated On :9 ஏப்ரல் 2024, 6:07 am

DIN

மத்திய விசாரணை அமைப்புகளின் தலைவர்களை மாற்றக் கோரி தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இரவு முழுவதும் தில்லி காவல் நிலைய வளாகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பாஜக அரசின் அழுத்தத்தில் எதிா்க்கட்சிகளை விசாரணை அமைப்புகள் குறிவைப்பதாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

இதனிடையே, அந்த மாநிலத்தின் மிதுனபுரி மாவட்டத்தில் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளைக் கைது செய்ய சென்ற தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் குழு மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் அக்கிராமத்தினரை என்ஐஏ அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம் சுமத்தினாா். மேலும், என்ஐஏ மற்றும் பாஜக இடையே கூட்டணி உள்ளதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இச்சூழலில், திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சாகெட் கோகலே, சாகரிகா கோஷ் ஆகியோா் தோ்தல் ஆணைய அதிகாரிகளை திங்கள்கிழமை சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

Story image

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தோ்தல் ஆணைய அலுவலகம் எதிரே 24 மணிநேரப் போராட்டத்தையும் அவா்கள் தொடங்கினா். இதையடுத்து, காவல் துறையினா் அவா்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

Story image
Story image

இருப்பினும், காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து விடிய விடிய தர்னா போராட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.