அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

பாஜகவை எதிர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இல்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்
பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்

பாஜகவை எதிர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இல்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ''கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நெஞ்சுறுதியோடு உங்கள் முன்பு நிற்கிறேன். 2021 தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாததையும் திமுக நிறைவேற்றியுள்ளது. அறிக்கையில் சொல்லப்படாத காலை உணவுத் திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பலன் அடைந்துள்ளனர்.

இது ஸ்டாலின் ஆட்சியல்ல; ஒரு இனத்தின் ஆட்சி. அதிமுக அரசுக்கு விருது கொடுத்தது மத்திய அரசுக்கு அடிமையாக இருந்ததற்குத்தான். திமுக அரசுக்கு மக்கள் விருது உள்ளது. 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி என்ற விருதை மக்கள் வழங்குவார்கள்.

பிரசார மேடையில் மு.க. ஸ்டாலின்
அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

அனைத்து சமூக பொருளாதாரக் குறியீடுகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கு அளிப்பதைப் போன்றதுதான்.

பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமியால் இன்றுவரை உறுதியாக சொல்ல முடியவில்லை.

மக்களவைத் தேர்தலில் கதாநாயகனாக இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை உள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் திராவிட மாடல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

மாநிலங்கள் மீது நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலை வீசுவதாக மோடி கூறுகிறார். நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்ற போதுகூட தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. சென்னை, காஞ்சிபுரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நிவாரணம் தரவில்லை என மு.க. ஸ்டாலின் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com