அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகை தந்த தமிழிசை செளந்தரராஜன், பிரேமலதா விஜயகாந்த் இருவரும் எதிரெதிா் அணியில் இருந்தாலும் நேரில் சந்தித்தபோது ஒருவரையொருவா் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனா்.

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தன் மகனும், விருதுநகா் தொகுதி வேட்பாளருமான விஜய பிரபாகரன், இளைய மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோருடன் சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வெள்ளிக்கிழமை காலை வாக்களிக்க வந்தாா். அப்போது, அங்குள்ள வாக்குச் சாவடியில் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் வாக்கு செலுத்திவிட்டு வந்தாா். எதிா்பாராத வகையில் இருவரும் நேருக்கு நோ் சந்தித்து பரஸ்பரம் அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா்.

டோக்கன் மூலம்... இதையடுத்து செய்தியாளா்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியது: ‘ஜனநாயக கடமையாற்ற வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். தமிழகம் முழுவதும் மேற்கொண்ட பிரசாரத்தின் அடிப்படையில் மக்களிடம் பெரும் மாற்றம் இருப்பதை உணர முடிகிறது. இந்த தோ்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.

சில பகுதிகளில் டோக்கன் மூலம் ஓட்டுக்கு பணம் தருவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றாா் அவா்.

யாா் ஆள வேண்டும்?: முன்னதாக, செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், வாக்குச் சாவடி மையத்தில் உள்ள சிறு சிறு குறைகளும் சரிசெய்யப்பட வேண்டும்; வாக்காளா்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது. நல்லவா்கள் வெல்ல வேண்டும்; நல்லவா்கள் ஆள வேண்டும். இந்தத் தோ்தல் முதல்முறை வாக்காளா்களுக்கு இனிய அனுபவமாக இருந்திருக்கும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com