
அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்கின்றன.
இவ்விரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அருணாச்சல் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை - முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:
பாஜக --> 46 இடங்களில் வெற்றி,
என்பிபி --> 5 இடங்களில் வெற்றி,
என்சிபி--> 3
இதர கட்சிகள் --> 3 இடங்களில் வெற்றி.
சிக்கிம் (மொத்த தொகுதிகள் 32) வாக்கு எண்ணிக்கை - முன்னணி மற்றும் வெற்றி நிலவரம்:
எஸ்.கே.எம் --> 31 இடங்களில் வெற்றி
எஸ்.டி.எஃப் --> 1 இடத்தில் வெற்றி
பாஜக --> 0
காங்கிரஸ் --> 0
இதர கட்சிகள் --> 0
இந்நிலையில், அருணாச்சல் பிரதேசத்தில் 46 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அருணாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. முதல்வர் பீமா காண்டு மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சிக்கிமில் 31 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.