தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வரலாறு காணாத வீழ்ச்சியில் பங்குச்சந்தை!

தேர்தல் முடிவுகள் எதிரொலியால் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2024, 10:53 am

DIN

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருவதால் பங்குச்சந்தை இன்று கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

பங்குகளின் விலை வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் ஏறத்தாழ ரூ.40 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

திங்கள்கிழமை சந்தை முடிவில் ரூ.426 லட்சம் கோடியாக இருந்த பிஎஸ்இ நிறுவனங்களின் மூலதனம் இன்றைய வர்த்தக ரூ.384 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் 76,285.78 புள்ளிகளுடன் துவங்கிய சென்செக்ஸ் 6000 புள்ளிகள் வரை இறக்கமடைந்து வர்த்தக இறுதியில் 4,389.73 புள்ளிகள் குறைந்து 72,079.05-ல் நிறைவடைந்தது. நிஃப்டியும் வர்த்தக இறுதியில் 1379.4 புள்ளிகளை இழந்து 21,884.50-ல் நிறைவடைந்தது.

இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அதிக புள்ளிகளை இழந்து தேசிய பங்குச்சந்தை பெரிய தடுமாற்றத்தை அடைந்துள்ளது.

இதில், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, அதானி எண்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.