சிக்கன் பிரியாணி ரூ.150: தேர்தல் ஆணையத்தின் விலைப் பட்டியல்

மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.150 என தேர்தல் ஆணையத்தின் விலைப் பட்டியலில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிகார் தேர்தல்: நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல்
பிகார் தேர்தல்: நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன.

இந்த நிலையில்தான், தேர்தலில் பிரசாரத்துக்கு வருவோருக்கு வழங்கும் 200க்கும் மேற்பட்ட உணவுப் பொருள்களின் திருத்தப்பட்ட விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

இந்த விலைப்பட்டியலின் அடிப்படையில், உணவுப்பொருள்களின் விலைகள், செலவின வரம்பு கணக்குக் காட்டும்போது, விலை அதிகமாக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேட்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

பிகார் தேர்தல்: நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல்
இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்

மக்களவைத் தொகுதி வேட்பாளரின் அதிகபட்ச தோ்தல் செலவினம் ரூ. 95 லட்சம் என இந்திய தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது. இது கடந்த 2019 தேர்தலின்போது ரூ.70 லட்சமாக இருந்தது.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜே. ராதாகிருண்ணன் வெளியிட்டிருக்கும் விலைப் பட்டியலில், ஒரு டீயின் விலை ரூ.15, காபி விலை ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில், சிக்கன்பிரியாணி விலை ரூ.180லிருந்து ரூ.150 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி பிரியாணி விலை ரூ.200 ஆகவே நீடிக்கிறது. அதுபோல, டி-சர்ட், புடவைகளின் விலையும் பழைய விலைப்பட்டியலில் இருப்பது போலவே நீடிக்கிறது.

தண்ணீர் பாட்டீல் ரூ.20, மோர் விலை ரூ.20, ஒரு மீட்டர் பூ ரூ.65, வாழை மரம் ரூ.700, சரவெடி பட்டாசுகள் ரூ.600 என பட்டியலிடப்பட்டுள்ளது.

பிகார் தேர்தல்: நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல்
உறக்கமின்மைக்கு மாத்திரைகள்தான் தீர்வா? இல்லவே இல்லை!

வேட்பாளர்களுக்கு இது குறித்து கூறியிருப்பதாவது, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தோ்தல் கணக்கு பராமரிக்கும்போது சரியானதாகவும், வேட்பாளா் செய்த அனைத்து தோ்தல் செலவுகளையும் உள்ளடக்கியதாகவும், தமது முகவராலோ அல்லது வேட்பாளா் தெரிவித்தவாறு செய்த செலவு கணக்குகளையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். வேட்பாளா் மனு தாக்கல் செய்த நாள் முதல், தோ்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரை இந்தக் கணக்கைப் பாராமரிக்க வேண்டும். வேட்பாளா் மனு தாக்கல் செய்வதற்கு முன்பு கட்சி சாா்பில் ஏதேனும் செலவுகள் செய்தால் அவை கட்சியின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் ரூ. 95 லட்சம் மட்டும் அதிகபட்ச தோ்தல் செலவினமாக இந்திய தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது.

வேட்பாளா் தாக்கல் செய்யும் செலவுக் கணக்கை இந்திய தோ்தல் ஆணையம் துல்லியமாக ஆய்வு செய்யும். வேட்பாளா் தோ்தல் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்யாமல் இருந்தாலும், தாக்கல் செய்த செலவு கணக்கு சரியாக இல்லாமலும், உண்மைக்கு மாறாகவும் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com