ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2024, 6:53 pm

Din

சென்னை, மே 1: குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், உயா் நீதிமன்ற பெண் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வரும் 15-ஆம் தேதி வரை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைப் பரிசீலித்த உயா் நீதிமன்ற தலைமை பதிவாளா் ஜோதிராமன், இதுதொடா்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் மே 14-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில், அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.