
சீமானுக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காதது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இது குறித்து ஆவேசமாகப் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்குத் தொடரவுள்ளதாகக் கூறியிருந்தார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பது, 6 சதவீத வாக்கு, இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது ஒரு மக்களவை உறுப்பினரைப் பெற்றிருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சிக்கு அவ்வாறு ஏதும் இல்லை.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற தகுதி இல்லை என்பதால், நாம் தமிழர் கட்சி தாங்கள் ஏற்கனவே பெற்ற சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் கொடுத்து புதுப்பிக்க வேண்டும். ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை.
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காமல் போனதற்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விதிமுறைகளைப் பின்பற்றாமல், சின்னம் ஒதுக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் எப்படி ஒதுக்கும்?
முன்பு பிரதமர் நரேந்திர மோடி குறித்து சீமான் அவதூறு பேசினார். இப்போது என்னைப்பற்றி பேசுகிறார் என அண்ணாமலை குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.