தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல் - பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...

vote poll

வாக்குப்பதிவு - DPS

Published On :

புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மக்கள் வாக்களிக்க வசதியாக இன்று பள்ளி, கல்லூரி மற்று அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வெவ்வேறு ஊர்களில் உள்ளவர்களும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.

பிற்பகல் 1 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் 56.83 சதவிகிதம், கேரளத்தில் 49.70 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 59.63 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக 11 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 37.06 சதவிகிதம், கேரளத்தில் 33.28 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 38.92 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Summary

The Election Commission of India has released the voting status as of 1:00 PM for the Legislative Assembly elections in Puducherry, Kerala, and Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.