புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் மாலை 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மக்கள் வாக்களிக்க வசதியாக இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பல்வேறு ஊர்களில் இருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.
மாலை 5 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் 72.40 சதவிகிதம், கேரளத்தில் 72.071 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 84.42 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அதிகபட்சமாக..
புதுவை: காரைக்காலில் 84.13 சதவிகிதமும், புதுச்சேரியில் 87.47 சதவிகிதமும் பதிவாகியுள்ளது.
அஸ்ஸாம்: தெற்கு சல்மாரா மண்காச்சார் தொகுதியில் 94.08 சதவிகிதமும், கோல்பாராவில் 91.34 சதவிகிதமும் அடுத்தது டாராங்கில் 90.91, போங்கைகாவ்ன் 91.77 சதவிகிதம் பதிவானது.
கேரளம்: எர்ணாகுளம் 77, பாலக்காடு 77.09, கோழிக்கோடுவில் 77.63, திருச்சூரில் 74.34 சதவிகிதமும் பதிவாகியுள்ளன.
முன்னதாக 3 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 72.40 சதவிகிதம், கேரளத்தில் 62.71 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 75.91 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Summary
The Election Commission of India has released the voting status as of 5:00 PM for the Legislative Assembly elections in Puducherry, Kerala, and Assam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


