சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!

வேனிலிருந்து இறங்கி விஜய் சைக்கிள் ஓட்டியது பற்றி...

வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்

Published On :

காரைக்குடிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் வழியில் வேனில் இருந்து இறங்கிய தவெக தலைவர் விஜய், சிறிது தூரம் சைக்கிளில் சென்றார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், தமிழ்நாடு சட்டபேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்காலுக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருக்கும் நிலையில், 4 மணிநேரத்துக்கு மேலாக விஜய் பயணித்து வருகிறார்.

காரைக்குடியை நெருங்கிய நிலையில், திடீரென்று பிரசார வேனைவிட்டு இறங்கிய விஜய், சிறிது தூரம் மாலை அணிந்தபடி சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

ஆனால், தொண்டர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், விஜய்யால் தொடர்ந்து சைக்கிளில் செல்ல முடியவில்லை. இதனால் மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறி மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

காரைக்குடி காவல்துறையினர் விஜய் பிரசாரத்துக்கு பகல் 12 மணிமுதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளனர்.

தற்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பிரசாரம் திடலுக்கு வர முடியாமல் மக்கள் கூட்டத்தில் விஜய் திணறி வருகிறார்.

மறுபுறம், பிரசாரம் நடைபெறும் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் பல மணிநேரமாக வெய்யிலில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Karaikudi: Vijay Steps Out of Van and Rides a Bicycle!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.