திருப்பரங்குன்றத்தில் கார்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படும், தைப்பூசம் மாநில விழாவாக கொண்டாடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று காலை வெளியிட்டார். இந்த நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த தேர்தல் அறிக்கைக்கு ’புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.
முக்கிய வாக்குறுதிகள்
1. குடும்பத் தலைைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000 நிதியுதவியாக ஒருமுறை வழங்கப்படும்.
2. ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அவை பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகைகள் பொழுது வழங்கப்படும்.
3. பெண்களுக்கு எதிரான குற்றங்களைை ஒழிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம். இதற்காகத் தடையற்ற ‘ஜீரோ-எப்ஐஆர்’ (Zero-FIR) பதிவுமுறை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளருக்கான பாதுகாப்பு, பாலியல், போக்ஸோ குற்றங்கள் உள்ளிட்ட கொடூரமாான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 100% கண்காணிப்பு கேமரா (CCTV) வசதி மற்றும் ‘நிர்பயா ’ நிதியை முழுமையாகப் பயன்படுத்துவது ஆகியவற்றை உறுதி செய்வோம்.
4. பெண்கள் தலைமையிலான கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு (MSME), உற்பத்தி அலகுகளை அமைக்க ரூ. 50 லட்சம் வரை வட்டி இல்லாக் கடன்கள் வழங்கப்படும். மேலும், அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இட ஒதுக்கீடு (Procurement Quota) கட்டாயமாக்கப்படும்.
5. முருகப் பெருமானின் பெருமையைப் போற்றும் வகையில், தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக அறிவிப்போம்.
6. திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்படுவதையும், அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வோம்.
7. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க, சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுடன் கூடிய ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ உருவாக்கப்படும். கடல்வழி கடத்தலைத் தடுக்க ‘கடலோர போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு’ உருவாக்கப்படும்.
8. உழவர் உறுதுணைத் திட்டத்தின்’ கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றைத் தொடங்குவதற்கு ஒருமுறை நிதியுதவியாக ரூ. 50,000 வழங்கப்படும்.
9. மீனவர்களுக்கு நியாயமான இழப்பீட்டை வழங்கும் வகையில், 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காால நிவாரணத் தொகையை ரூ. 8,000-லிருந்து ரூ. 12,000-ஆகவும், மீன்பிடி குறைநிலை காலத்திற்கான உதவித்தொகையை ரூ. 6,000-லிருந்து ரூ. 8,000-ஆகவும் உயர்த்துவோம். மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
10. தமிழக இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வட்டியில்லா கடன், வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாதவர்களுக்குக் கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் 1 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். மேலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, மாவட்டந்தோறும் தமிழ் வழியிலும் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள், திறன் கணக்கெடுப்பு மற்றும் தொழில்துறையுடன் இணைந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
11. மின்சார இருசக்கர வாகனங்கள் (e-scooters) வாங்குவதற்குத் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ. 25,000 மானியம் வழங்கப்படும்.
இதையும் படிக்க : மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை
Summary
Lamps Lit at Thiruparankundram; Thaipusam Declared a State Festival! — BJP Election Manifesto
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!

திருப்பரங்குன்றத்தில் தீபம்! பாஜக தேர்தல் அறிக்கை!

மகளிர், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000; பொது சிவில் சட்டம்! மேற்குவங்க பாஜக வாக்குறுதிகள்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
