தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாளை கோவை மற்றும் பொன்னேரியில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில கட்சிகளைத் தவிர்த்து தமிழ்நாடு தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் சாலை வலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
பாஜக சார்பில் தில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை தமிழ்நாடு வராத மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நாளை(ஏப். 18) தமிழகம் வரும் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
ஒருபுறம் ராகுல் வருகைக்கு மத்தியில் பிரதமர் மோடி நாளை கோவைக்கு வருகை தரவுள்ளார். கோவை கொடீசியா திடலில் நாளை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் வருகையால் தேசியக் கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் பிரசாரத்துக்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Summary
As the date for the Legislative Assembly elections in Tamil Nadu draws near, Prime Minister Narendra Modi and the Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, are set to campaign tomorrow in Coimbatore and Ponneri.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

தலைவா்களால் தகித்த தமிழகம்!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

