எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்

சென்னையில் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலினுடன் கேஜரிவால் - ANI

Updated On :21 ஏப்ரல் 2026, 7:38 am

தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

”ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலான தொகுதி மறுவரையறை மசோதாவை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதாவால் தென் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் எனக் கருதுகிறேன். மக்களுக்கு நற்பணிகளை மேற்கொள்ளும் எவருக்கும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும்.

பாஜகவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எவ்விதமான ஆதரவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Summary

Do not give importance to the BJP, which has no presence in Tamil Nadu! — Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.