திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

5 மாதங்கள் மட்டுமே பதவி வகித்த எம்எல்ஏ!

5 மாதங்கள் மட்டுமே பதவி வகித்த எம்எல்ஏ!

News image

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 10:03 pm

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக 5 மாதம் 10 நாள்கள் மட்டுமே பதவி வகித்துள்ளார் கி. சத்தியசீலன் (87).

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் 1967, 1971, 1977, 1980 ஆகிய நான்கு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என். கிட்டப்பா. 1984-ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பிறகு 1984-இல் நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட கி. சத்தியசீலன் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். ஆனால், அதே ஆண்டு (1984) இறுதியில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 1984-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிமுதல் நவ. 15 வரை 5 மாதம் 10 நாள் மட்டுமே பதவி வகித்தார்.

இதைத் தொடர்ந்து, 1984-ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட சி. சத்தியசீலன் அதிமுக வேட்பாளர் எம்.தங்கமணியிடம் 4,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கி. சத்தியசீலனுக்கு 2023-ஆம் ஆண்டு திமுக சார்பில் பெரியார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.