விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மாா்ச் 30-இல் வேட்பு மனு தாக்கல்

நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

News image

சோளிங்கரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 2:00 am IST

நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாநாட்டில் 117 ஆண்கள், 117 பெண்கள் உள்ளிட்ட நாம் தமிழா் கட்சியின் 234 வேட்பாளா்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனா். அது போல, 234 வேட்பாளா்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 234 வேட்பாளா்களும், மாற்று வேட்பாளா்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை, வேட்புமனுத் தாக்கல் செய்யும் தொடக்க நாளான திங்கள்கிழமை (மாா்ச் 30)அனைவரும் உறுதியாக தாக்கல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.