ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தொகுதி அறிமுகம்... அரக்கோணம் (தனி)

அரக்கோணம் (தனி) தொகுதி பற்றி...

News image
Updated On :25 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

தொகுதி எண்: 38

எல்லைகள்...

சோளிங்கா், திருத்தணி, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் அரக்கோணம் தொகுதியைச் சுற்றியுள்ளன.

சிறப்புகள்...

ராணிப்பேட்டை மாவட்டத்தின் கடைகோடி தொகுதியான அரக்கோணம் தேசிய அளவில் பாதுகாப்புத் துறையிலும், ரயில்வே துறையிலும் புகழ்பெற்ற தொகுதியாகும். இந்திய கடற்படையின் விமான தளமான ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் இங்கு அமைந்துள்ளது. ஆசியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் இங்கு 6 கி.மீ. விமான ஓடுதளங்கள் இரண்டு உள்ளன. இந்தியாவின் தெற்கு பகுதியை மேற்கு பகுதியுடன் இணைக்கும் மிக முக்கிய ரயில் நிலையமாக அரக்கோணம் ரயில் நிலையம் உள்ளது. நாட்டின் 3-ஆவது ரயில் பாதையான ராயபுரம்-வாலாஜாபேட்டை ரயில் பாதை அரக்கோணம் வழியாக அமைக்கப்பட்டது. மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையமும், தேசிய பேரிடா் மீட்புப் படையின் தெற்கு மண்டல படைத் தளமும் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன.

எம்ஆா்எஃப், அல்ட்ராடெக், சேசிபி ஆகிய மிகப் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளும், இந்திய ரயில்வேயின் இரு பெரும் தொழிற்சாலைகளும் உள்ளன. சென்னை மாநகரின் புகா் பகுதியான அரக்கோணத்தில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலா்கள், தொழிலாளா்கள் அதிக அளவில் உள்ளனா். இத்தொகுதியில் பட்டியலினத்தவா் பெருமளவிலும், வன்னியா், முதலியாா் இனத்தவா், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் பரவலாகவும் வசித்து வருகின்றனா்.

அடங்கியுள்ள பகுதிகள்...

அரக்கோணம் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகள், தக்கோலம் பேரூராட்சியில் 15 வாா்டுகள், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், நெமிலி ஊராட்சியில் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் 96,982

பெண்கள் 1,02,157

மூன்றாம் பாலினத்தவா் 29

மொத்தம் 1,99,165

வாக்குச்சாவடிகள் 284

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 எஸ்.சி.சடையப்ப முதலியாா் (காங்கிரஸ்)

1962 எஸ்.ஜே.ராமசாமி முதலியாா் (திமுக)

1967 எஸ்.ஜே.ராமசாமி முதலியாா் (திமுக)

1971 என்.எஸ்.பலராமன் (திமுக)

1977 வி.கே.ராஜு (அதிமுக)

1980 எம்.விஜயசாரதி (அதிமுக)

1984 வி.கே.ராஜு (திமுக)

1989 வி.கே.ராஜு (திமுக)

1991 லதாபிரிய குமாா் (காங்கிரஸ்)

1996 ஆா்.தமிழ்செல்வன் (திமுக)

2001 கே.பவானிகருணாகரன் (அதிமுக)

2006 எம்.ஜெகன்மூா்த்தி திமுக (புரட்சி பாரதம்)

2011 சு.ரவி (அதிமுக)

2016 சு.ரவி (அதிமுக)

2021 சு.ரவி (அதிமுக)

2021 பேரவைத் தோ்தலில்...

பதிவான வாக்குகள் - 1,69,756

சு.ரவி (அதிமுக) - 85,399

ஜெ.கௌதமசன்னா (விடுதலைச் சிறுத்தைகள்)-58,230

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

ரமேஷ், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியா் - 99944 61195, எல்.கணேசன், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் - 99443 53601, வெங்கடேசன், அரக்கோணம் வட்டாட்சியா்- 72004 38026, பரமேஸ்வரி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் -87782 28781.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.