சட்டப்பேரவைத் தேர்தலில் இருமுனைப் போட்டி மட்டும்தான் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும் தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் அவர் பேசுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கும்தான் போட்டி.
நானே எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் போய் நிற்க முடியாது அல்லவா?. அதனாலேயே இவர்களை தேர்வு செய்துள்ளேன்.
மக்கள் நலக் கூட்டணியின் மொத்த பேக்கேஜும் இப்போது திமுக கூட்டணியில்தானே உள்ளது. கிழிந்த துணியை தைத்து வைத்ததுபோல திமுக கூட்டணி ஒட்டுப் போட்ட கூட்டணி. பாமரர்களுக்கும் அதிகார மமதை கொண்டோருக்கும் சேவை செய்வோருக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது.
உங்களை நம்பி எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் எப்படி வந்தேனோ, அதே மாதிரி உங்களை நம்பி வேட்பாளர்களை ஒப்படைக்கிறேன்.
மே 4ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளிலும் நம் வேட்பாளர்கள் வெற்றி என்ற உலகச் சாதனைச் செய்தி வர வேண்டும். வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது மக்களுக்கான காப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்.
எம்எல்ஏ என்பவர் எல்லை காப்பாளராக இருக்க வேண்டும். வேட்பாளர்களை நானே தேர்வு செய்துள்ளேன்.
களத்தில் மக்களோடு மக்களாக நிற்பவர்களையே வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளேன். இது தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்காக மட்டும் வந்திருக்கிறேன். இது விசில் புரட்சி தேர்தல் ஆகும்.
4 முனைப்போட்டி, 40 முனைப்போட்டி என என்ன சொன்னாலும் இங்கே திமுக - தவெக இடையேதான் போட்டி உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Vijay has said that the assembly elections will be a two-way contest.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது!

கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!
தவெகவில் புதிதாக ஐக்கியமான செல்வம் சேப்பாக்கத்தில் போட்டி!
விஜய்யின் நாளைய தேர்தல் பிரசார பயண விவரம்!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


