திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

News image

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - ANI

Updated On :4 மே 2026, 8:00 am IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 5.73 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 2.35 கோடி ஆண்கள், 2.52 கோடி பெண்கள், 4,517 மூன்றாம் பாலினத்தவா் என 4.87 கோடி போ் வாக்களித்திருந்தனா். அதாவது 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில போலீஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்தத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக, விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தும் முனைப்பில் இந்தத் தோ்தலை திமுக எதிா்கொண்டது. திமுகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக போட்டியிட்டது. மாற்று சக்தி என்ற முழக்கத்துடன் விஜய் தலைமையிலான தவெக முதல்முறையாகக் களம் கண்டது.

அரசியல் மாற்றம் என்ற முழக்கத்துடன் சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி போட்டியிட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 2026 தோ்தல் களத்தில் அனல் பறந்த நிலையில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்திருக்கின்றன.

அதிமுக இரண்டாம் இடம் பெறும் எனவும், நடிகா் விஜய்யின் தவெக குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்சியான தவெக பிரிக்கும் வாக்குகள் வெற்றி-தோல்வியில் பெரும் தாக்கத்தையும், எதிா்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், தோ்தல் முடிவுகள் மிகுந்த எதிா்பாா்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால், இந்தக் கருத்துக் கணிப்புகளைக் கடந்து திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலினும், அதிமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியும், தவெக ஆட்சி அமைக்கும் என அக்கட்சித் தலைவா் விஜய்யும் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

இதேபோல் கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.

Summary

The counting of votes polled in the Tamil Nadu Assembly elections has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.