2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்கள் பலரும் தற்போதைய தேர்தலில் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளிலும், திமுக 72 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில், கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்கள் பலரும் தற்போதைய தேர்தலில் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றவர்களின் தற்போதைய நிலை:
1. ஐ. பெரியசாமி (திமுக) - ஆத்தூர் தொகுதி
2021 - திமுக வேட்பாளரான ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 1,35,571 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இவரே.
2026 - இவர் இந்தமுறை அதே ஆத்தூர் தொகுதியில் 14 சுற்றுகள் முடிவில் 59172 வாக்குகள் பெற்று 13379 முன்னிலை பெற்றுள்ளார்.
2. எ.வ.வேலு (திமுக) - திருவண்ணாமலை தொகுதி
2021 - தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தணிகைவேலை 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எ.வ.வேலு வெற்றி பெற்றார்.
2026 - இந்த முறை 11 சுற்றுகள் முடிவில் 40,073 வாக்குகள் பெற்று 291 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் 39,782 வாக்குகளைப் பெற்றார்.
3. கிருஷ்ணசாமி (திமுக) - பூந்தமல்லி தொகுதி
2021 - கிருஷ்ணாசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ராஜமன்னாரை 94,110 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
2026 - இந்த முறை 16 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 59623 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், தவெக வேட்பாளர் பிரகாசம் 1,15,294 வாக்குகள் பெற்று 55,671 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
4. எடப்பாடி பழனிசாமி (அதிமுக) - எடப்பாடி தொகுதி
2021 - அதிமுக நட்சத்திர வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பந்தகுமாரை 93802 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்.
2026 - எடப்பாடி பழனிசாமி இந்த முறை 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் சுயேச்சையாக போட்டியிட்டவரும், தவெகவின் ஆதரவு பெற்றவருமான பிரேம் குமார் இடம்பிடித்துள்ளார்.
5. கே.என். நேரு (திமுக) - திருச்சி மேற்கு தொகுதி
2021 - கே.என்.நேரு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபனை 85,109 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2026 - இந்த முறை 87627 வாக்குகள் பெற்று வெறும் 4,000+ வாக்குகள் வித்தியாசத்தில் 82,744 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் ராமமூர்த்தியை தோற்கடித்துள்ளார்.
6. மு.க.ஸ்டாலின் (திமுக) - கொளத்தூர் தொகுதி
2021 - முக ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜராமை 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2026 - இந்தத் தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 8,000+ வாக்குகள் வித்தியாசத்தில் 64,000+ வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தார்.
7. உதயநிதி ஸ்டாலின் (திமுக) - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி
2021 - இந்தத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
2026 - இந்த முறை உதயநிதி ஸ்டாலின் 52,000+ வாக்குகளைப் பெற்று 9,000+ வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 41,662+ வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் செல்வத்தை தோற்கடித்தார்.
8. தங்கம் தென்னரசு (திமுக) - திருச்சுழி தொகுதி
2021 - தங்கம் தென்னரசு தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகரை 60,992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2026 - தங்கம் தென்னரசு இந்த முறை 42304 வாக்குகள் பெற்று 12-வது சுற்று முடிவில் 5847 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இரண்டாமிடத்தில் தவெக வேட்பாளர் சமயன் 36457 வாக்குகள் பெற்றுள்ளார்.
9. பொன்முடி (திமுக) - திருக்கோவிலூர் தொகுதி
2021 - இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட பொன்முடி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கலிவரதனை 59,680 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
2026 - இந்த முறை பொன்முடிக்கு திமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கு, தவெக வேட்பாளர் விஜய் ஆர் பரணிபாலாஜி 53,651 வாக்குகள் பெற்று 2405 முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்ததாக திமுக வேட்பாளர் பழனிசாமி இரண்டாமிடத்தில் உள்ளார்.
10. கதிரவன் (திமுக) - மணச்சநல்லூர் தொகுதி
2021 - இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை 59,618 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றார்.
2026 - இந்த முறை 19 வது சுற்றூ முடிவில் 71,673 வாக்குகள் பெற்ற கதிரவன் 10,155 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக தவெக வேட்பாளர் சரவணன் 61518 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார்.
Summary
The Current Status of Those Who Won by the Largest Margins in the 2021 Elections
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026 முடிவுகளை மாற்றும் நிலையில் 110 தொகுதிகள்! எப்படி?

ஒரே தொகுதியில் 4- ஆவது முறையாக களம் காணும் ஓ.பி.எஸ்.

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

ஒரே தொகுதியில் 4-ஆவது முறையாக களம் காணும் முன்னாள் அமைச்சா்!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


