தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image

அன்புமணி இராமதாஸ் - X

Updated On :5 மே 2026, 9:38 am IST

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை மே 4 காலை 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் கடந்து நீடித்தது.

234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணி 73 இடங்களைப் பிடித்து ஆட்சியை இழந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முக்கியத் தலைவர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றியடைந்துள்ளது. இதில், பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது.

திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம்.

ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது.

இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த  கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி  மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

PMK leader Anbumani Ramadoss has issued a statement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.