பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தருமபுரியில் செளமியா அன்புமணி வெற்றி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் செளமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.

News image

செளமியா அன்புமணி - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:45 pm IST

சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் (அன்புமணி பிரிவு) வேட்பாளர் செளமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சிவனை விட 20 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளிலும், திமுக 53தொகுதிகளிலும், அதிமுக 44தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

மாலை 5 மணி நிலவரப்படி, தவெக 8 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட செளமியா அன்புமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெகவின் சிவனை விட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Summary

Sowmya Anbumani wins in Dharmapuri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.